நிலையான வைப்பு

நீங்கள் முதலீடு செய்த மூலதனத்துக்கு சான்றிதழ் சகிதமான அனுகூலத்துடன் உங்களது சேமிப்பினை கட்டியெழுப்புவதற்கான முறையொன்றை தேடுவதாயின், அளவு மற்றும் சேவைக்காலத்திற்கேட்ப நாம் கவர்ச்சிகரமான வட்டி வீதத்துடன் வழங்குவோம்.

தேவையானவைகள்

  • உங்களது விருப்பத்துக்கு ஏற்ப திட்டமொன்றை தெரிவு செய்து மாதாந்த காலாண்டு அரையாண்டு வருடாந்த அல்லது காலம் முடிவடைந்ததன் பின்னர் வட்டியை பெற்றுக் கொள்ளல்.
  • முற்பணக்கொடுப்பனவாக வைப்பிலிருந்து 90% பெற்றுக் கொள்ளல்.
  • உங்களது நிதித்தொகைக்காக கூடிய வட்டி வீதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த முறையாகும்.

நிலையான வைப்பின் அனுகூலம்

உங்களுக்கு கூடிய வட்டி வீதமொன்றை பெற்றுக் கொள்ள முடியும்.
மூலதனத்துக்கு சேர்க்கப்பட்ட வட்டியுடன் காலம் முடிவடையும் போது உங்களது வைப்பினை புதுப்பிக்குமாறு அல்லது மூலதனத்தை மாத்திரம் புதுப்பிக்குமாறு நிறுவனத்தினால் வேண்டுகோள் விடுக்க முடியும்.

முற்பணக்கொடுப்பனவு

உங்களது நிலையான வைப்பிலிருந்து 90% வரை முற்பணக்கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும்.
ரூபா 100,000 அல்லது அதற்கு அதிகமான நிலையான வைப்புக்காக மற்றும் 1 வருடத்துக்கு அதிகமான வைப்புக்காலத்துக்காக இந்த விசேட வசதி வழங்கப்படும்.
நிலையான வைப்பில் வட்டி வீதம் வைப்பின் காலம் முடிவடையும் வரை பாதிக்கப்படாது.

வட்டி வழங்குதல்

நீங்கள் 01 வருடம் தொடக்கம் 05 வருடம் வரை நிலையான வைப்பிலிட்டால் மாதாந்தம் அல்லது காலம் முடிவடையும் போது வட்டித்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் 01 மாதம் தொடக்கம் 06 மாதங்கள் வரை நிலையான வைப்பிலிட்டால் காலம் முடிவடைந்ததன் பின்னரே வட்டித் தொகை வழங்கப்படும்.
02 வருடங்கள் தொடக்கம் 05 வருடங்கள் வரை நிலையான வைப்பிலிட்டால் மாதாந்தம், வருடாந்தம் அல்லது காலம் முடிவடையும் போது வட்டித் தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.

நிலையான வைப்பிலிடல்

நீங்கள் விரும்பும் கிளைக்குச் சென்று கிளையின் அதிகாரி ஒருவருடன் உங்களது தேவையை கலந்துரையாடி வைப்பிலிட முடியும்.
நீங்கள் தரவிரக்கம் செய்த விண்ணப்பப்படிவத்தை சரியான முறையில் நிரப்பி அதனை எமது சீபீசீ எந்தவொரு நிதிக் கிளையிலும் கையளிக்க முடியும்.
நிலையான வைப்பிற்கான வட்டி வீதம் கீழே உள்ள இணைப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
தயவு செய்து பின்வரும் இணைப்பில் இருந்து தரவிரக்கம் செய்து கொண்ட விண்ணப்பபடிவத்தை நிரப்பி குறித்த கிளையில் கையளிக்கவும். உங்களது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த இது அவசியமாகும்.

மீளப் பெறல்

மீளப் பெறுவதற்காக அனுமதி வழங்கப்படுவது நிலையான வைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கால வரையறையின் பின்னர் மாத்திரமே. நிலையான வைப்புச் சான்றிதழை முன்வைத்ததன் பின்னர் நீங்கள் விரும்பிய வங்கிக் கிளைக்கு அதனை மாற்றம் செய்து தருவோம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்
உற்பத்தித் தகவல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தேவைக்கு ஏற்ப மாறுபடும்.
எனவே புதிய தகவல்கள் மற்றும் நடைமுறையிலிருக்கின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்காக உங்களது அருகில் இருக்கும் கிளையுடன் தொடர்பினை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமாகும்.

பயன்பாடுகள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தகைள் - நிலையான வைப்பு II

1. நிலையான வைப்பு பற்றுச்சீட்டை ஒழுங்கான முறையில் விடுவித்து நிறுவனத்தில் கையளிக்கும் வரை நிறுவனத்தினால் நிலையான வைப்பினால் கிடைக்கும் பணத்தொகையினை வழங்க முடியாது என்பதனை தயவு செய்து கவனிக்கவும்.

2. வைப்பின் காலம் முடிவடையும் திகதிக்கு குறைந்தது 7 தினங்களுக்கு முன்னர் நிறுவனத்துக்கு மாற்றமாக நீங்கள் எழுத்து மூல அறிவித்தல் தரவில்லை என்றால் அதற்குச் சமனான காலத்துக்காக நிலையான வைப்பினை புதுப்பிக்கும் தற்றுணிபு விருப்பு நிறுவனத்தினுடையதாகும்.

3. நிலையான வைப்புக்களின் அனைத்து புதுப்பித்தல்களும் அச்சந்தர்ப்பங்களில் போது நடைமுறையிலிருக்கும் வட்டி வீதத்துக்கு ஏற்புடையதாகும்.

4. வைப்புக்கள் ஒருங்கிணைந்த பெயர்களில் இருப்பின் ஒருங்கினைந்த வைப்புச் செய்த ஒரு நபர் மரணித்தால் வைப்பிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் திரட்டப்பட்ட வட்டி இருப்பின், நடைமுறையிலிருக்கின்ற சட்டத்தின் கீழ் உயிருடனிருப்பவருக்கு வழங்கப்படும்.

5. நிலையான வைப்பின் மூலம் கிடைக்கின்ற பணத்தொகையை காலம் முடிவடைவதற்கு முன்னர் வழங்குவது நிறுவனத்தின் கடப்பாடன்று

6. குறைந்த வைப்பு வீதத்துக்கு நிலையான வைப்பினை அதிகரிப்பதற்கு நீங்கள் கருதுவீர்களாயின் தயவு செய்து கிளை முகாமையாளருடன் கலந்துரையாடவும்.

நாங்கள் உங்களை திரும்ப அழைப்போம்